ரூ. 30.05 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஆடி A3

ஆடி நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட A3  மாடலை ரூ. 30.05 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப  விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஒப்பனை மற்றும் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் ரூ. 30.05 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் டீசல் மாடல் ரூ. 32.3 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்புறத்தில் புதிய LED முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் லெட் விளக்குகள், புதிய அறுங்கோண வடிவ கிரில், பம்பர் ஆகியவையும் பின்புறத்தில் பம்பர் மற்றும் விளக்குகள் ஆகியவையும் மாற்றப்பட்டுள்ளது.  உட்புறத்திலும் புதிய த்ரீ ஸ்போக் ஸ்டேரிங் வீல், புதிய டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், AC வென்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் புதிய 1.4 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். பெட்ரோல் என்ஜின் 150 Bhp  திறனையும் 250 Nm  இழுவைத்திறனையும் வழங்கும்.  இதன் திறன் 7 ஸ்பீட் கொண்ட S-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் முன்புற வீலுக்கு  கடத்தப்படுகிறது. இந்த மாடலில் COD (Cylinder On Demand)  எனும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எஞ்சினின் பளு குறைவாக இருக்கும் பொது தற்காலிகமாக சிலிண்டர் மூடிக்கொள்ளும். இதன் மூலம் இந்த மாடல் 19.2 Kmpl  மைலேஜ் வழங்குகிறது.

இதன் டீசல் என்ஜின் 143 Bhp  திறனையும் 320 Nm  இழுவைத்திறனையும் வழங்கும்.  இதன் திறன் 6 ஸ்பீட் கொண்ட S-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் முன்புற வீலுக்கு  கடத்தப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.