ரூ.52.75 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஆடி A6 35TFSI பெட்ரோல்

ஆடி நிறுவனம் பெட்ரோல் என்ஜின் கொண்ட A6 மாடலின்  புதிய 35TFSI எனும் வேரியண்ட்டை ரூ.52.75 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது.  இந்த மாடல் 2014 ஆம் ஆண்டு நடந்த பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த மாடலில் ஆடி நிறுவனத்தின் புதிய மேட்ரிக்ஸ் LED  முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய 8 இன்ச் கொண்ட MMi நேவிகேசன் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், மேட்ரிக்ஸ் LED  முகப்பு விளக்குகள் என டீசல் மாடலில் உள்ள அனைத்தும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.8 லிட்டர்  டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 Bhp  திறனையும் 3290 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலும் 7 ஸ்பீட் கொண்ட S  ட்ரானிக் ஆட்டோமேடிக் சிஸ்டத்துடன் கிடைக்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.9 வினாடிகளில் கடந்து விடும். மேலும் இந்த மாடலில் ஆட்டோ, ஏபிசியன்சி, கம்பர்ட், டைனமிக் மற்றும் இண்டுவிடுவள்  என ஐந்து டிரைவிங் மாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாடல் BMW 5 சீரீஸ், மெர்சிடெஸ் பென்ஸ் E கிளாஸ் மற்றும் ஜகுவார் XF  ஆகிய மாடலுக்கு போட்டியாக நிலை நிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.