2019 ஆம் ஆண்டு வெளியிடப்படும் ஆடி Q4

ஆடி நிறுவனம் 2019 ஆம் ஆண்டு  Q4 மாடல் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாடல் Q3 மற்றும் Q5 மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படும். மேலும் இந்த மாடல் 2014 ஆம் ஆண்டு பீஜிங் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட TT ஆப்ரோடு கான்செப்ட்டின் அடிப்படையில் தான் இருக்கும்.

இந்தியாவில் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லை. எனினும் இந்த மாடல் உலகளவில் வெளியிடப்படும் அதே ஆண்டில் இந்தியாவிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டால் இந்த மாடல் ரேஞ் ரோவர் எவோக் மற்றும் BMW X2 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.