ரூ 67.76 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது பெட்ரோல் என்ஜினுடன் கூடிய ஆடி Q7

ஆடி நிறுவனம் பெட்ரோல் என்ஜினுடன் கூடிய Q7 SUV மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ப்ரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியன்ட்களில்  கிடைக்கிறது. இதன் ப்ரீமியம் பிளஸ் வேரியன்ட் ரூ 67.76 லட்சம் ஷோரூம் விலையிலும் டெக்னாலஜி வேரியன்ட் ரூ 74.43 லட்சம் ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டீசல் எஞ்சின் கொண்ட மாடலுக்கு இதற்கும் தோற்றம் மற்றும் உபகரணங்களில் எந்த மாற்றமும் இல்லை. புதிதாக 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 252 Bhp திறனையும் 370 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆடி நிறுவனத்தின் 8 ஸ்பீட் கொண்ட டிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.8 வினாடிகளில் கடந்து விடும் வல்லமை கொண்டது. இந்த மாடல் லிட்டருக்கு 1.68kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன் டீசல் மாடலில் கிடைக்கும் அனைத்து வித வசதிகளும் இந்த மாடலிலும் கிடைக்கும். இந்த மாடல் BMW X5, ஜீப் கிராண்ட் செரோக்கீ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLE  போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.