வெளியிடப்பட்டது ஆடி Q8 கான்செப்ட் SUV

ஆடி நிறுவனம் Q8  கான்செப்ட் SUV மாடலை டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.  இந்த மாடல் 80 களில் ஆடி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Ur-கோட்ரோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் தான் ஆடி நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடலாக வெளிவர உள்ளது.

இந்த மாடல் SUV  மற்றும் கூப் வடிவமைப்பின் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஆடி நிறுவனத்தின் புதிய MLB EVO பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 5.02 மீட்டர் நீளமும், 2.04 மீட்டர் அகலமும் 1.7 மீட்டர் உயரமும் கொண்டது. மேலும் இந்த மாடல் 3.0 மீட்டர் வீல் பேசும் கொண்டது. இந்த மாடல் மிகப்பெரிய மாடலாக  இருந்தாலும் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு ஹைபிரிட் மாடலாக வர உள்ளது. இதில் 333 Bhp திறன் கொண்ட என்ஜினும் 100kW  எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த மாடல் 450 Bhp திறனையும் 700 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.4 வினாடிகளில் கடக்கும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 250  கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.