வெளிப்படுத்தப்பட்டது ஆடி R8 ஸ்பைடர் பிளஸ்

ஆடி நிறுவனம் மிகவும் வேகமான கன்வெர்ட்டிபிள் மாடலான  R8 ஸ்பைடர் பிளஸ் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாடல் தான் ஆடி நிறுவனத்தின் தயாரிப்பு நிலை மாடல்களில் அதிக திறன் கொண்ட மாடல் ஆகும்.

இந்த மாடலில் 5.2 லிட்டர் V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 610Bhp திறனும் 560Nm இழுவைத்திறனும் கொண்டது. இந்த திறன் ஏழு ஸ்பீட் டியூவல் கிளட்ச் மற்றும் ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் நான்கு வீல்களுக்கும் கடத்தப்படுகிறது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 வினாடிகளில் அதிகபட்சமாக மணிக்கு 328 கிலோமடேர் வேகம் வரையும் செல்லும்.

இந்த மாடலின் மேற்க்கூரையை வெறும் இருபது வினாடிகளில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் திறந்து மூட முடியும். இந்த மாடலில் 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் ரூ 2.5 முதல் 2.8 கோடி விலையில்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.