ஆடி e ட்ரான் ஸ்போர்ட்ஸ்பேக் கான்செப்ட் மாடலின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டது

ஆடி நிறுவனம்  e ட்ரான் ஸ்போர்ட்ஸ்பேக் கான்செப்ட் மாடலின் வரைபடங்களை  அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாதம் நடைபெறும் ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் வெளியிடுவதன் முன்னோட்டமாக இதன் வரைபடங்களை வெளியிட்டுள்ளது ஆடி நிறுவனம்.

ஆடி நிறுவனம் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டுக்குள் ஸ்போர்ட்ஸ், ஹேட்ச் மற்றும் SUV  என மூன்று முழுமையான எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் என அறிவித்துள்ளது. அவற்றில் இதுவும் ஒரு மாடல் ஆகும். மேலும் ஆடி நிறுவனம் ஏற்கனவே  e ட்ரான் குவாட்ரோ SUV கான்செப்ட் மாடலை 2015 ஆம் ஆண்டு பிராங்பேர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு ஸ்போர்ட்ஸ்பேக் கான்செப்ட் என்றாலும் ஒரு கிராஸ் ஓவர் போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் எஞ்சின் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் தொடர்பான கூடுதல் விவரங்கள் ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும். அதுவரை மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.