2017 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது ஆடி e ட்ரான் ஸ்போர்ட்ஸ்பேக்

ஆடி நிறுவனம்  e ட்ரான் ஸ்போர்ட்ஸ்பேக் கான்செப்ட் மாடலை 2017 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஜாகுவார் I-பேஸ் மாடலுக்கு போட்டியாக இருக்கும். 

ஆடி நிறுவனம் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டுக்குள் ஸ்போர்ட்ஸ், ஹேட்ச் மற்றும் SUV  என மூன்று முழுமையான எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் என அறிவித்துள்ளது. அவற்றில் இதுவும் ஒரு மாடல் ஆகும். மேலும் ஆடி நிறுவனம் ஏற்கனவே  e ட்ரான் குவாட்ரோ SUV கான்செப்ட் மாடலை 2015 ஆம் ஆண்டு பிராங்பேர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு ஸ்போர்ட்ஸ்பேக் கான்செப்ட் என்றாலும் ஒரு கிராஸ் ஓவர் போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மூன்று மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றில் இரண்டு பின்புற ஆக்சிலிலும் ஒன்று முன்புற ஆக்சிலிலும் பொருத்தப்பட்டிருக்கும். இவை அனைத்தும் இணைந்து 496Bhp திறனையும் 800Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் ௧௦௦ கிலோமீட்டர் வேகத்தை 4.5 வினாடிகளில் அதிகபட்சமாக மணிக்கு 210  கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள 95kWh லித்தியம்-அயர்ன் ஒரு முழுமையான சார்ஜுக்கு 500 கிலோமீட்டர் வரை செல்லும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.