வெளிப்படுத்தப்பட்டது BMW 2002 ஹோமேஜ் கான்செப்ட்

BMW  நிறுவனம் 2002 டர்போ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 2002 ஹோமேஜ் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலியில் Concours dElegance Villa dEste எனும் பழமையான வாகனங்களுக்கான நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த வருடம்  மே 20 முதல்  22 ஆம்  தேதி வரை  நடை பெற்றது. அந்நிகழ்ச்சியில் BMW  நிறுவனம் 1960 களில் புகழ்பெற்று விளங்கிய 2002 டர்போ மாடலின் 50 ஆம் ஆண்டு நினைவாக 2002 ஹோமேஜ் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியது.

இந்த மாடல் 2002 டர்போ மற்றும் M8 என இரண்டு மாடல்களின் வடிவங்களை கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் பழைய 2002 டர்போ மாடலை விட பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 2002 டர்போ மாடலின் வடிவத்தை வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பான தோற்றத்தையும் தருகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.