இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW 3-சீரீஸ் ஷேடோ எடிசன்

BMW நிறுவனம் இந்தியாவில் 3-சீரீஸ் ஷேடோ எடிசன் சிறப்பு பதிப்பு மாடலை ரூ 41.4 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 330i M sport மற்றும் 320d என இரண்டு வேரியன்ட்டுகளில் முறையே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டுள்ளது. 330i M sport மற்றும் 320d வேரியன்ட்டுகள் முறையே ரூ 47.3 லட்சம் மற்றும் ரூ 41.4 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய ஷேடோ எடிசன் சிறப்பு பதிப்பு மாடலில் புதிய கருப்பு வண்ண கிட்னி கிரில், ஸ்மோக்ட் முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், புதிய அலாய் வீல், கருப்பு நிற குரோம் புகைபோக்கி, M ட்ரிம் ஸ்டேரிங் வீல், 8.7-இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையிலான உட்புறம் வடிவமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, 330i M sport வேரியன்டில் 2.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் 320d வேரியன்டில் 2.0-லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது. 2.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 252bhp திறனும் 350Nm இழுவைத்திறனும் வழங்கும். மற்றும் 2.0-லிட்டர் டீசல் எஞ்சின் 190bhp திறனும் 400Nm இழுவைத்திறனும் வழங்கும். இந்த இரண்டு மாடல்களிலும் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த BMW 3-சீரீஸ் ஷேடோ எடிசன் மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.