ரூ. 54 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது BMW 5 சீரீஸ் மாடலின் பெட்ரோல் வேரியன்ட்

BMW  நிறுவனம் 5 சீரீஸ் மாடலின் பெட்ரோல் வேரியன்டை ரூ. 54 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும்  5 சீரீஸ் மாடளுக்கும் இதற்கும் என்ஜினை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. BMW  நிறுவனம் 5 சீரீஸ் மாடலை டீசல்  என்ஜினுடன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வெளியிட்டு வருகிறது ஆனால் தற்போது தான் இதன் பெட்ரோல் வேரியன்டை வெளியிடுகிறது. 

இந்த மாடலில் 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 184 Bhp  திறனையும் 270 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் எட்டு ஸ்பீட் கொண்ட ZF  ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 233 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 

இந்தியாவில் சில நகரங்களில் 2.0 லிட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள டீசல் என்ஜின் கார்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மேலும் பல நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. அதனால் நிறைய கார் நிறுவனங்கள் பெட்ரோல் என்ஜின் கொண்ட  மாடல்களை வெளியிட்டு வருகிறது. மகிந்திரா நிறுவனம் தனது அணைத்து கார்களையும் பெட்ரோல் என்ஜினுடனும் டொயோடா நிறுவனம் 2.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட இன்னோவா மாடலையும் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.