வெளிப்படுத்தப்பட்டது BMW 8 சீரீஸ் கூப் கான்செப்ட்

BMW நிறுவனம் இத்தாலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 சீரீஸ் கூப் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இதன் டீசர் சில நாட்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. BMW நிறுவனத்தின் மற்ற மாடல்களின் சாயல் துளியும் தெரியாத அளவு இந்த மாடல் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

8 சீரீஸ் மாடல்களை 1990களில் BMW நிறுவனம் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அனால் அதன் வடிவங்கள் சிறிதும் இதில் பயன்படுத்தப்படவில்லை. இந்த மாடல் 2018  ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின் தொடர்பான விவரங்களை BMW நிறுவனம் வெளியிடவில்லை. இந்த கான்செப்ட் மாடலில் கைப்பிடிகள் கொடுக்கப்படவில்லை. ஒன்று முழுவதும் எலெக்ட்ரானிக் சிஸ்டமாக இருக்கலாம் அல்லது தயாரிப்பு நிலை மாடலில் கைப்பிடிகள் கொடுக்கப்படலாம். மேலும் இந்த மாடல் BMW நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் ஏராளமான தொழில்நுட்பங்களுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.