1.6 மற்றும் 1.55 கோடி விலையில் வெளியிடப்பட்டது BMW X6M மற்றும் X5M

BMW  இந்தியா நிறுவனம் முறையே 1.6 மற்றும் 1.55 கோடி விலையில்  X6M மற்றும் X5M   ஆகிய அதிக செயல்திறன் கொண்ட மாடல்களை வெளியிட்டுள்ளது. 

இந்த இரண்டு மாடலிலும் 4.4 லிட்டர் ட்வின் டர்போ V8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 575 Bhp திறனும் 750 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் 8 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மற்றும் BMW வின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.2 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த இரண்டு மாடல்களும் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த இரண்டு மாடலும் ஒரே அடிப்படியில் உருவாக்கப்பட்டது தோற்றத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும். இது மெர்செடெஸ் மற்றும் ஆடி நிறுவனங்களின் அதிக செயல்திறன் கொண்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.