அக்டோபர் 15 அன்று வெளியிடப்படும் BMW X6M மற்றும் X5M

BMW நிறுவனம் அக்டோபர் 15 ஆம் தேதி X6M மற்றும் X5M  என இரண்டு அதிக செயல்திறன் கொண்ட கார்களை வெளியிட இருக்கிறது. இந்த இரண்டு மாடலும் 1.5 கோடி விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது BMW வின் அதிக செயல்திறன் கொண்ட மாடல் ஆகும். மேலும் சில அதிக செயல்திறன் கொண்ட மாடல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு மாடலிலும் 4.4 லிட்டர் ட்வின் டர்போ V8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 575 Bhp திறனும் 750 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் 8 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மற்றும் BMW வின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாடலும் ஒரே அடிப்படியில் உருவாக்கப்பட்டது தோற்றத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும். இது மெர்செடெஸ் மற்றும் ஆடி நிறுவனங்களின் அதிக செயல்திறன் கொண்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.