வெளிப்படுத்தப்பட்டது BMW Z4 ரோட்ஸ்டெர் கான்செப்ட்

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW நிறுவனம் Z4 ரோட்ஸ்டெர் கான்செப்ட் மாடலை பெப்பல் பீச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் தொடர்பான சில விவரங்களையும் சில படங்களையும் இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடல் BMW நிறுவனத்தின் விஷன் நெக்ஸ்ட்-100 டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் தயாரிப்பு நிலை மாடல் அடுத்த வருடத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. BMW நிறுவனம் இந்த மாடலுக்கென சில பாகங்களை டொயோடா நிறுவனத்திடம் இருந்து பெற ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் தொடர்பான விவரங்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.