ரூ 64.90 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது BMW Z4 ரோட்ஸ்டெர்

BMW நிறுவனம் இந்தியாவில் Z4 ரோட்ஸ்டெர் மாடலை ரூ 64.90 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் இரண்டு வித பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் CBU(Completely Built-Up)  யூனிட் மூலம் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. BMW Z4 ரோட்ஸ்டெர் மாடல் sDrive20i மற்றும் M40i என இரண்டு வேரியன்ட்டுகளில் முறையே ரூ 64.90 மற்றும் ரூ 78.90 லட்சம் ஷோரூம் விலையில் கிடைக்கும்.

இதன் sDrive20i மாடலில் 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 197PS திறனையும் மற்றும் 320Nm இழுவைத்திறனையும் வழங்கும், மேலும் இந்த மாடல் 0-100kmph வேகத்தை வெறும் 6.6 வினாடிகளில் கடந்த விடும் வல்லமை கொண்டது. இதன் M40i மாடலில் 3.0-லிட்டர், ஆறு சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 340PS திறனையும் மற்றும் 500Nm இழுவைத்திறனையும் வழங்கும், மேலும் இந்த மாடல் 0-100kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் கடந்த விடும் வல்லமை கொண்டது. இந்த இரண்டு எஞ்சின் மாடலும் 8-ஸ்பீட் ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பின்புற வீலுக்கு திறனை கடத்துகிறது. 

BMW Z4 ரோட்ஸ்டெர் மாடலில் காற்றுப்பைகள், ABS, டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், சைடு இம்பேக்ட் ப்ரொடெக்ஷன், எலெக்ட்ரானிக் வெஹிகிள் இம்மொபிலைஸர் மற்றும் கிராஷ் சென்சார் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் மற்றும் டிரைவர் மெமரி சீட் மற்றும் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான சொகுசு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. BMW Z4 ரோட்ஸ்டெர் மாடல் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் SLC மற்றும் போர்ச்சே 718 பாக்ஸ்டர் போன்ற கன்வெர்ட்டிபிள் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.