பக்கவாட்டு கண்ணாடி இல்லாத i 8 காரை வெளிப்படுத்தியது BMW

பக்கவாட்டு கண்ணாடி இல்லாத i 8 காரை  லாஸ் வேகஸில் நடைபெறும் கன்சூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் BMW வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் பழைய i 8 மாடலில் உள்ள பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக இரண்டு புறமும் கேமராக்களை பொருத்தியுள்ளது BMW நிறுவனம். காற்றியக்க வடிவத்தை மேம்படுத்தவும் சிறந்த பின்புற பார்வையை வழங்கவும் இந்த கேமராக்கள் உதவும்.

இந்த மாடலில் இரண்டு பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக இரண்டு கேமராக்கள் மற்றும் பின்புறத்தின் நடுவே ஒரு கேமரா என மூண்டு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று கேமராக்களும் பிடிக்கும் மூன்று படங்களும் இணைந்து ஒரே படமாக உள்ளே  உள்ள  பின்புற கண்ணாடியில் தெரியும். மிக சிறந்த பின்புற பார்வையை இந்த கேமரா வழங்கும்.

இந்த கேமராக்கள் மூலம் துல்லியமாக பின்புறத்தை பார்க்க முடிவதுடன் பின்னே உள்ள பொருள்களின் தூரங்களையும் கணக்கிட முடியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.