2020 ஏப்ரல் 1 முதல் BS - VI மாசுக்கட்டுப்பாடு இந்தியாவில் அமுல்படுத்தப்படுகிறது

இந்தியாவில் தற்போது காற்று மாசுமடுவதை தடுக்க பல வழிகளில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு படியாக BS - VI மாசுக்கட்டுப்பாடு 2020 ஏப்ரல் 1 முதல் அமுல்படுத்தப்படும் என இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

BS - V மாசுக்கட்டுப்பாடு 2019 ஆம் ஆண்டும் அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு BS - VI மாசுக்கட்டுப்பாடு வகையும் அமுல்படுத்தப்படும் என்று தான் இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முதலில் தெரிவித்திருந்தது. அனால் தற்போது அதிகரித்து வரும் மாசு காரணமாக BS - V மாசுக்கட்டுப்பாடு வாகையை அமுல்படுத்தாமல் நேரடியாக 2020 ஏப்ரல் 1 முதல் BS - VI மாசுக்கட்டுப்பாடு வகையை அமுல்படுத்த இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாட்டை குறைக்க 2.0 லிட்டர் மேல் கொள்ளளவு கொண்ட என்ஜின் வாகனங்களை தடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டுக்குள் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் BS - VI மாசுக்கட்டுப்பாடு வகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் தொழில்நுட்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.