கோட் குவாட்ரிசைக்கிள் மாடலை வெளிப்படுத்தியது பஜாஜ்

பஜாஜ்  நிறுவனம் கோட் குவாட்ரிசைக்கிள் மாடலை இன்று வெளிப்படுத்தியது. இது ஒரு கார் கிடையாது குவாட்ரிசைக்கிள் மாடல். ஆனால் இந்த  மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது ஐரோப்பிய சந்தையில் மட்டுமே வெளியிடப்படும். இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

இந்த மாடலில் 216 cc கொண்ட வாட்டர் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20 bhp  திறனையும் 19.6 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடல் லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும். இந்த மாடல் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 

இந்த மாடல் இந்திய மதிப்பில் 1.32 லட்சம் விலை கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.