ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் பென்ட்லி பென்டய்கா SUV

பென்ட்லி நிறுவனம் பென்டய்கா SUV மாடலை ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்வதாக இருந்த நிலையில் தற்போது அந்த மாடலை வெளிப்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பென்ட்லியின் முதல் SUV மாடல் இது. 2012 ஆம் ஆண்டு பென்ட்லி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 

முன்புறம் பென்ட்லி நிறுவனத்தின் தனித்துவமான வடிவமைப்பை பெற்றுள்ளது. வெளிப்புறத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் ஒரு சொகுசு கார் என்பதற்கு ஏற்றவாறு தானியங்கி குளிரூட்டி, டச் ஸ்க்ரீன் சிஸ்டம் என  அனைத்து வசதிகளையும் இந்த மாடல் பெற்றுள்ளது. 

இந்த மாடலில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ V 12 என்ஜின்பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 600 bhp திறனையும் 900 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் ஆட்டோமேடிக் கியர் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 4 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 301 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.

அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனை தொடங்கப்படும் எனவும் இந்தியாவில் அடுத்த வருட இரண்டாவது அரையாண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.