ரூ. 3.85 கோடி விலையில் வெளியிடப்பட்டது பென்ட்லி பென்டய்கா SUV

பிரிட்டனை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பென்ட்லி இந்தியாவில் பென்டய்கா SUV  மாடலை ரூ.3.85 கோடி டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது. பென்ட்லியின் முதல் SUV மாடல் இது. 2012 ஆம் ஆண்டு பென்ட்லி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்புறம் பென்ட்லி நிறுவனத்தின் தனித்துவமான வடிவமைப்பை பெற்றுள்ளது. வெளிப்புறத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் ஒரு சொகுசு கார் என்பதற்கு ஏற்றவாறு தானியங்கி குளிரூட்டி, டச் ஸ்க்ரீன் சிஸ்டம் என  அனைத்து வசதிகளையும் இந்த மாடல் பெற்றுள்ளது.  மேலும் இந்த மாடலில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான கடிகாரம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரிலேயே கிடைக்கும். ஏனெனில் அந்த கடிகாரத்தை பொருத்தினால் விலை ஒரு கோடி வரை அதிகரிக்கும். 

இந்த மாடலில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ V 12 என்ஜின்பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 600 bhp திறனையும் 900 Nm இழுவைதிறனையும் வழங்கும்.  ஆட்டோமேடிக் கியர் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 4 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 301 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.