வெளிப்படுத்தப்பட்டது பென்ட்லி பிளையிங் ஸ்பர் V8 S பிளாக் எடிசன்

பென்ட்லி நிறுவனம் பிளையிங் ஸ்பர் V8 S பிளாக் எடிசன் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இதில் பிளாக் எடிசன் என்பது முழுமையான கருப்பு வண்ணத்தை குறிப்பது கிடையாது மாடல் முழுவதும் இருள் படிந்த ஷேட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தான் குறிக்கிறது. இந்த  பிளாக் எடிசன் மாடலில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது மற்றபடி வேறு எந்த மாற்றமும் கிடையாது.

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய இருள் படிந்த முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், கருப்பு வண்ண விண்டோ சுற்றுப்பகுதி, கைப்பிடி மற்றும் கருப்பு வண்ண அலாய் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் கருப்பு மற்றும் சிவப்பு வண்ண கலவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புற வண்ணத்தை உங்களுக்கு பிடித்தவாறும் மாற்றிக்கொள்ளலாம்.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 528 bhp திறனையும் 680 Nm இழுவைதிறனையும் வழங்கும். எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் சிஸ்டம்  இந்த மாடலில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 4.9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 306 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.