2015 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற சில கார் மாடல்கள்

2015 ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் துறை சிறந்த்த வளர்ச்சியையே பெற்றுள்ளது. நிறைய புதிய மாடல்களும் மேம்படுத்தப்பட்ட மாடல்களும் வெளியிடப்பட்டன. அதில் 2015 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற சில கார் மாடல்களை இந்த தொகுப்பில் காணலாம். 

மாருதி சுசுகி பலெனோ

இந்த மாடலை மிகப்பெரிய வெற்றி பெற்ற மாடலாக கூற முடியாது ஆனால் S - கிராஸ் அளவுக்கு மோசம் போகவில்லை. மேலும் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு ப்ரீமியம் அந்தஸ்தை பெற்று தந்தது இந்த மாடல் தான். 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி  மாருதி சுசுகி நிறுவனத்தால் இந்த மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இதன்   பெட்ரோல் என்ஜின்  1197cc கொள்ளளவும்   மற்றும்  டீசல் என்ஜின்  1248cc கொள்ளளவும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp (6000 rpm) திறனும்  115Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடலின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் இரண்டுமே  21.4 மைலேஜ்   தரும் என ARAI சான்றளிதுள்ளது. இதன்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  மாடல் 27.39kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.
 
 இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 5 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள்  என  மொத்தம் 9 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் சிவப்பு, அர்பன் ப்ளூ,  ரே ப்ளூ, வெள்ளை, சில்வர், கிரே மற்றும் ஆரஞ்சு   ஆகிய 7 வண்ணங்களில் கிடைகிறது . 

ஹோண்டா ஜாஸ்

2015 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற மாடல்களில் குறிப்பிடத்தக்க மாடல் இந்த புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  ஹோண்டா  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட இந்த  மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 1199CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  18.7 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. இதன்  டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 27.3 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 7வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள் என மொத்தம் 12  வேரியண்டுகளில் மற்றும்  ஆரஞ்சு , வெள்ளை, சில்வர், மெட்டாலிக், பர்பிள், பெர்ல் வெள்ளை  மற்றும் கோல்டன்  ப்ரௌன் ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது. மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும்.

மகிந்திரா TUV300

2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த மாடல் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. மகிந்திரா நிறுவனத்தின் விற்பனையை மீண்டும் தூக்கி நிறுத்தியது இந்த மாடல் தான். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  மகிந்திரா  நிறுவனத்தால் இந்த காம்பேக்ட் SUV  மாடல் வெளியிடப்பட்டது. இது 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட  மாடல். இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது குறைந்த  விலையில் கிடைக்கும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்  கொண்ட SUV மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இதன் டீசல் என்ஜின் 1493CC கொள்ளளவு கொண்டது. இதன் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்  டீசல் என்ஜின் மாடல் 84bhp (3750 rpm) திறனும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல் 81bhp (3750 rpm) திறனும் மேலும் இதன் இரண்டு மாடலும்  230Nm (1500-2250rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 18.5 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல் 17 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த மாடல் 7 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, ஆரஞ்சு  மற்றும் சிவப்பு ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.

ஹுண்டாய் க்ரெடா

2015 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வெற்றியை பெற்ற மாடல் இது. இதுவரை இந்தியாவில் மட்டும் 75,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த SUV தயாரிப்பாளரான மகிந்திராவையே பின்னுக்கு தள்ளியது இந்த மாடல் தான். 

இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 1.4  & 1.6 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1591CC கொள்ளளவும், 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 1396CC கொள்ளளவும் மற்றும்1.6 லிட்டர் டீசல் என்ஜின் 1582CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123 bhp (6400 rpm) திறனும் 154Nm (4850rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மாடல்  15.29 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 21.38 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1900-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19.67 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  17.01 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 7 வேரியண்டுகள் என மொத்தம் 10  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, பீஜ் மற்றும் கிரே ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.

ரெனால்ட் க்விட்

2015 ஆம் ஆண்டில் இமாலய வெற்றியை பெற்ற மாடல் என்றால் அது மாற்று கருத்தே இல்லாமல் ரெனால்ட் க்விட் மாடல் தான். யாரும் எதிர்பார்க்காத ஏன் ரெனால்ட் நிறுவனமே எதிர்பார்க்காத அளவு இமாலய வெற்றியை பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரெனால்ட்  நிறுவனத்தால் இந்த மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 799CC கொள்ளளவு கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த கார்  25.17 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  இந்த மாடல் தான் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் மட்டும்  6  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ் மற்றும் கிரே ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.