புதிய தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எலன்ட்ரா மாடலை கடந்த வருடம் உலகளவில் வெளியிட்டது. ஆனால் இந்தியாவில் இன்னும் இந்த மாடல் வெளியிடப்படவில்லை. இன்னும் ஒரு சில மாதங்களில் அல்லது பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இதன் முன்பதிவு ஹூண்டாய் ஷோரூம்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா மாடல் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் தற்போதைய மாடலை விட 20 மிமீ அதிக நீளமும் 25 மிமீ அதிக அகலமும் கொண்டது. ஆனால் வீல்பேசில் மாற்றம் இல்லை. புதிய தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா மாடல் 4610 மிமீ நீளமும், 1800 மிமீ அகலமும் மற்றும் 1450 மிமீ உயரமும் கொண்டது.

இந்த மாடல் இந்தியாவில் அதே 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு எஞ்சினுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும். இந்த மாடல் உலகளவில் 1.6 லிட்டர் முதல் 2.0 லிட்டர் வரை பல என்ஜின்களுடன் விற்கப்படுகிறது. சமீபத்தில் 207Bhp திறனையும் 265 Nm  இழுவைத்திறனையும் வழங்கும் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் எஞ்சினுடன் இதன் ஸ்போர்ட் வெர்சன் கொரியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் வோல்க்ஸ்வேகன் ஜீட்டா, ஸ்கோடா  ஆக்டேவியா  மற்றும் செவ்ரோலெட் குரூஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.