மேம்படுத்தப்பட்ட ரேஞ் ரோவர் எவோக் மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

மேம்படுத்தப்பட்ட ரேஞ் ரோவர் எவோக் மாடலின் முன்பதிவை தொடங்கியது லேண்ட் ரோவர் நிறுவனம். இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் அடுத்த மாதம் பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மட்டும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

முன்புறம் பின்புறத்தில் பம்பர்கள் மாற்றப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய இருக்கைகள், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 187 bhp திறனை வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் 45 முதல் 55 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.