2018 ஆம் ஆண்டு முதல் கார்களின் விலையை உயர்த்தும் கார் நிறுவனங்கள்

2018 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மஹிந்திரா, டாடா, டொயோடா, ஹோண்டா, இசுசூ , ஸ்கோடா மற்றும் மாருதி சுசூகி போன்ற நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவித்துள்ளது. மேலும் சில நிறுவனங்கள் இந்த மாதத்திற்குள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு விலையை உயர்த்த போகிறது என்பதை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நிறுவனங்கள் அறிவித்துள்ள விலையேற்ற விவரங்கள்:

  • மஹிந்திரா - அதிகபட்சம் 3 சதவீதம் வரை
  • டாடா - அதிகபட்சம் ரூ 25000 வரை 
  • டொயோடா - அதிகபட்சம் 3 சதவீதம் வரை
  • ஹோண்டா - 1 முதல் 2 சதவீதம் வரை
  • மாருதி சுசூகி - அதிகபட்சம் 2 சதவீதம் வரை
  • இசுசூ - 3 முதல் 4 சதவீதம் வரை
  • ஸ்கோடா - 2 முதல் 3 சதவீதம் வரை

அதே சமயம் இந்த மாதம் கார் வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகளை அனைத்து நிறுவனங்களும் வழங்குவது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஊரில் என்னென்ன சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள அருகில் உள்ள டீலர்ஷீப்புகளை தொடர்பு கொள்ளுங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.