வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட செவ்ரோலேட் ட்ரைல்ப்ளேசர்

செவ்ரோலேட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ட்ரைல்ப்ளேசர்  மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது. இந்த மாடலை கடந்த பேங்காக் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் விரைவில் பிரேசிலில் வெளியிடப்படும் என எதிர்பார்ர்க்கப்படுகிறது.

வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முன்புற கிரில், முகப்பு விளக்குகள் மற்றும் சில பகுதிகள்  மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 200 bhp திறனும் 500 Nm இழுவைதிறனும் கொண்டது.

இந்த மாடலில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டம், குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்கு என ஏராளமான வசதிகள் கிடைக்கும். 

இது 7 இருக்கை கொண்ட முழுமையான ப்ரீமியம் SUV வகையை சேர்ந்தது. இந்த மாடல் டொயோடா - ஃபார்சுனர் மற்றும் மிட்சுபிஷி பஜிரோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் அடுத்த வருடம் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.