அக்டோபர் 21 அன்று வெளியிடப்படும் செவ்ரொலெட் ட்ரையல் பிளேசர்

ட்ரையல் பிளேசர் மாடல் அக்டோபர் 21 அன்று வெளியிடப்படும் என  செவ்ரொலெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 7 இருக்கை கொண்ட முழுமையான ப்ரீமியம் SUV வகையை சேர்ந்தது. இந்த மாடல் டொயோடா - ஃபார்சுனர் மற்றும் மிட்சுபிஷி பஜிரோ மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். 

ட்ரையல்பிளேசர் SUV மாடல் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடல் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 193 bhp திறனும் 500 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டதுடன் கிடைக்கும்.

மேலும் இந்த மாடல் 20 முதல் 25 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.