1,01,597 டீசல் பீட் கார்களை திரும்ப அழைக்கிறது செவ்ரொலெட்

செவ்ரொலெட் நிறுவனம் க்ளட்ச் பெடலில் ஏற்ப்பட்ட பிரச்னை காரணமாக 1,01,597 டீசல் பீட் கார்களை திரும்ப அழைக்கிறது. இந்த கார்கள் டிசம்பர் 2010 முதல் ஜூலை 2014 வரை தயாரிக்கப்பட்ட கார்கள்  ஆகும்.

இந்த கார்களில் உள்ள  க்ளட்ச் பெடல்களை தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது செயலிழந்து விடும் அபாயம் இருப்பதாக செவ்ரொலெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் பிரச்னை உள்ள பாகங்கள் இலவசமாக அதிகாரப்பூர்வ ஷோ ரூம்களில் மாற்றித்தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

செவ்ரொலெட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் எமிசன் பிரச்னை காரணமாக 1 லட்சத்திற்கும் மேலான டவேரா கார்களை திரும்ப அழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.