இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது சிட்ரோயன் C5 ஏர்கிராஸ்

PSA குழுமம் இறுதியாக இந்தியாவில் சிட்ரோயன் பிராண்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், தனது முதல் மாடலான C5 ஏர்கிராஸ் மாடலையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல்கள் தமிழ் நாட்டில் உள்ள ஓசூர் பிளான்டில் தயாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சிட்ரோயன் நிறுவனம் C5 ஏர்கிராஸ் மாடலில் 80 சதவீதத்திற்க்கும் மேலான பாகங்களை உள்நாட்டிலிருந்து பெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஸ்ப்ளிட் முகப்பு விளக்குகள் என சிறப்பான வடிவமைப்பை தருகிறது. இந்த மாடல் 4,500 மிமீ நீளமும், 1,840 மிமீ அகலமும் மற்றும் 1,670 மிமீ உயரமும் கொண்டது. மேலும் இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், காற்றுப்பை, EBD உடன் கூடிய ABS, பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  PSA குழுமம் சிட்ரோயன், பீஜோட், DS, ஓபல் மற்றும் வாக்ஸ்ஹால் ஆகிய பிராண்டுகளில் கார்களை உலகம் முழுவதும் வீரப்பனை செய்து வருகிறது. மேலும், PSA குழுமம் இந்தியாவில் பழமையான அம்பாஸடர் கார் பிரண்டை சில நாட்களுக்கு முன்பு கையகப்படுத்தியது மிக மிக குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.