ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் டட்சன் கிராஸ்

டட்சன் நிறுவனம் கிராஸ் கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலை ஜனவரி 18 ஆம் தேதி இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த மாடல் கோ கிராஸ் எனும் பெயரில் ௨௦௧௫ ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் 2016 டெல்லி வாகன கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இது டட்சன் கோ மற்றும் கோ + கான்செப்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல் ஆகும். மேலும் இதன் அதிகாரப்பூர்வ டீசர் படத்தையும் டட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டட்சன் கோ மற்றும் கோ + மாடலை விட சிறப்பான தோற்றமும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற கிராஸ் ஓவர் மாடல்களில் உள்ள அணைத்து அம்சமும் இதிலும் உள்ளது. பெரிய முகப்பு கிரில், LED முகப்பு விளக்குகள் பிளாஸ்டிக் கிளடிங்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.என்ஜின் தொடர்பான எந்த ஒரு விவரமும் வெளியிடப்படவில்லை. ஆனால் கோ மற்றும் கோ + மாடலில் உள்ள தி 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  பெட்ரோல் எஞ்சின்  68bhp (6000 rpm) திறனும்104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

மேலும் இந்த மாடல் ரூ 4 முதல் ரூ 6 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.