ரூ 3.29 லட்சம் மற்றும் ரூ 3.83 லட்சம் ஆரம்ப விலைகளில் முறையே வெளியிடப்பட்டது டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்

டட்சன் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களை முறையே ரூ 3.29 லட்சம் மற்றும் ரூ 3.83 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலைகளில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல்களில் 28 புதிய வசதிகளும் 100 க்கும் மேற்பட்ட மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
டட்சன் கோ:
D - ரூ 3.29 லட்சம் 
A - ரூ 3.99 லட்சம் 
A (O) - ரூ 4.29 லட்சம் 
T - ரூ 4.49 லட்சம் 
T(O) - ரூ 4.89 லட்சம் 

டட்சன் கோ+:
D - ரூ 3.83 லட்சம் 
A - ரூ 4.53 லட்சம் 
A (O) - ரூ 5.05 லட்சம் 
T - ரூ 5.30 லட்சம் 
T(O) - ரூ 5.69 லட்சம் 

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED முகப்பு விளக்குகள், புதிய முன்புற பம்பர், 14 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், புதிய பின்புற பம்பர் ஆகியவையும் உட்புறத்தில் புதிய 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் மற்றும் புதிய உட்புற வடிவமைப்பு என ஏராளமான மாற்றங்கள் உட்புறத்தில் தான் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மாடலில் இரண்டு காற்றுப்பை, ABS, EBD, பிரேக் அசிஸ்ட் மற்றும் பின்புற சென்சார் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கும். இந்த எஞ்சின் 68bhp (6000 rpm) திறனும்104Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த திறன் ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்கள் முந்தய வண்ணங்களுடன் கூடுதலாக முறையே ஆரஞ்சு மற்றும் பிரவுன் வானங்களிலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.