கோ மற்றும் கோ பிளஸ் ரீமிக்ஸ் சிறப்பு பதிப்பு மாடல்களை வெளியிட்டது டட்சன்

டட்சன் நிறுவனம் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் ரீமிக்ஸ் சிறப்பு பதிப்பு மாடல்களை முறையே ரூ 4.21 மற்றும் ரூ 4.99 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எஞ்சின் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை. 

டட்சன் கோ ரீமிக்ஸ் சிறப்பு பதிப்பு மாடலின் வெளிப்புறத்தில் கருப்பு வண்ணத்தில் ஆரஞ்சு நிற கிராபிக்ஸா மற்றும் சில அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டட்சன் கோ பிளஸ் ரீமிக்ஸ் சிறப்பு பதிப்பு மாடலின் வெளிப்புறத்தில் சில்வர் வண்ணத்தில் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற கிராபிக்ஸ் மற்றும் சில அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இரு மாடலும் உட்புறத்தில் கருப்பு வண்ணத்தில் ஆரஞ்சு நிற வேலைப்பாடுகளுடன் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் T வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 68bhp (6000 rpm) திறனும்104Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த திறன் ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் T வேரியண்டில் மட்டுமே கிடைப்பதால் காற்றுப்பைகள் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.