ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் டட்சன் ரெடி கோ

டட்சன் நிறுவனம் ரெடி கோ மாடலை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த வாகன  கண்காட்சியிலேயே  கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடலும் ரெனால்ட் க்விட் மாடலின் பிளாட்பாமில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த மாடல் வித்தியாசமான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

LED  விளக்குகள், பனி விளக்குகள், பின்புற ஸ்பாய்லர், அறுங்கோண முன்புற கிரில், பூமராங் வடிவிலான பின்புற விளக்குகள், அலாய் வீல் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்ப நிலை மாடல் என்பதால் தயாரிப்பு நிலை மாடலில் அதிக படியான மாறுதல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடலில் ரெனால்ட் க்விட் மாடலில் உள்ள 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 53 Bhp  திறனையும் 72 Nm  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 2.5 முதல் 4 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.