செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்படும் டட்சன் ரெடி-கோ ஸ்போர்ட் சிறப்பு பாதிப்பு மாடல்

டட்சன் நிறுவனம்  ரெடி-கோ மாடலின் சிறப்பு பாதிப்பு மாடலை செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த புதிய சிறப்பு பாதிப்பு மாடலில் புதிய வண்ணத்திலான வீல் கவர், பாடி கிராபிக்ஸ் மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கும். இது 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த கார்  25.17 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 20 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இதன் பெட்ரோல்  என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  130 முதல் 135 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும். மேலும் இந்த சிறப்பு பாதிப்பு மாடல் டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.