டட்சன் - ரெடி கோ

2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் டட்சன் நிறுவனத்தால் ரெடி கோ மாடல் கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது டட்சன் கோ மற்றும் கோ+ மாடலுக்கு அடுத்தபடியாக டட்சன் நிறுவனத்தால் இந்தியாவில் வெளியிடப்படும் மாடல். வெளித்தோற்றம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது பார்பதற்கு ஒரு SUV மாடல் பொண்ட தோற்றத்தை கொடுக்கிறது.


 LED  விளக்குகள், பனி விளக்குகள், பின்புற ஸ்பாய்லர், அறுங்கோண முன்புற கிரில், பூமராங் வடிவிலான பிபுற விளக்குகள், அலாய் வீல் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிலை மாடலில் அதிக படியான மாறுதல்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது

உட்புறம் மற்றும் என்ஜின் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை எனினும் உட்புறம் டட்சன் கோ மாடலை விட சிறப்பானதாகவே  இருக்கும்.மேலும் இந்த மாடல் 4 முத்தம் 5 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.