வெளியிடப்பட்டது டட்சன் ரெடி கோ லிமிடெட் எடிசன் 2018

பண்டிகை காலத்தை முன்னிட்டு டட்சன் நிறுவனம் ரெடி கோ லிமிடெட் எடிசன் 2018 சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் கூடுதலாக சில உபகரணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு பதிப்பு மாடல் 0.8L மற்றும் 1.0L என இரண்டு எஞ்சின் தேர்விலும் கிடைக்கும், ஆனால் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் 0.8L மாடல் ரூ 3.58 லட்சம் விலையிலும் 1.0L மாடல் ரூ 3.85 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடல் வெள்ளை, சில்வர் மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடலில் புதிய பாடி கிராபிக்ஸ், சிவப்பு வண்ண க்ரில் இன்ஸெர்ட், புதிய ஸ்பாய்லர், புதிய வீல் கவர், புதிய முன்புற மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட், சிவப்பு வண்ணத்தில் அலங்காரம் செய்யப்பட்ட உட்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்  ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே அதே  0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் 67 Bhp திறனையும் 91 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.