ரெடி கோ மாடலின் வரைபடங்களை வெளியிட்டது டட்சன்: ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியீடு

டட்சன் நிறுவனம் ரெடி கோ மாடல் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது அந்த மாடலின் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த வாகன  கண்காட்சியிலேயே  கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடலும் ரெனால்ட் க்விட் மாடலின் பிளாட்பாமில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த மாடல் வித்தியாசமான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

LED  விளக்குகள், பனி விளக்குகள், பின்புற ஸ்பாய்லர், அறுங்கோண முன்புற கிரில், பூமராங் வடிவிலான பின்புற விளக்குகள், அலாய் வீல் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வரைபடத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு ஆரம்ப நிலை மாடல் என்பதால் தயாரிப்பு நிலை மாடலில் இவை அனித்தும் இருக்குமா என்பது சந்தேகமே.

இந்த மாடலில் ரெனால்ட் க்விட் மாடலில் உள்ள 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 53 Bhp  திறனையும் 72 Nm  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 2.5 முதல் 4 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.