ஜேம்ஸ் பாண்டின் அடுத்த கார் ஆஸ்டன் மார்டின் DB10 விவரங்கள்

ஜேம்ஸ் பாண்டின் 24 வது படமான ஸ்பெக்டர் சில நாட்களுக்கு முன்பு தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படம் இந்தியாவில் நவம்பர் 25 அன்று வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்டுக்காக பிரத்தியேகமாக DB 10 எனும் மாடலை ஆஸ்டன்  மார்டின் நிறுவனம் வடிமைதுள்ளது. ஏற்கனவே ஸ்பெக்டர் படத்திற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கார்களை ஜகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் இயக்குனர் சாம் மென்டெஸ் நிறைய மாடல்களின் பாடங்களை பார்த்த பிறகு இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. சுறாவின் வடிவத்தினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய மாடல். இந்த மாடலில் 4.8 லிட்டர் V 8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 313 Bhp திறனையும் 470 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.

ரோம் நகர வீதிகளில் ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரேக் ஆஸ்டன்  மார்டின் DB 10 காரிலும் நடிகர் மற்றும் மல்யுத்த வீரர் டேவிட் பாடிஸ்டா C-X75 சூப்பர் காரிலும் மோதும்  ஒரு சேசிங் காட்சி சிறப்பானதாகவும் படத்தில் திருப்பு முனையாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.