2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் கார்களுக்கு டெல்லியில் தடை

சுப்ரீம் கோர்ட் 2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் கார்களுக்கு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கு டெல்லியில் தடை விதித்துள்ளது. இது ஆட்டோமொபைல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. ஆனால் சிறிய கார்களுக்கு இந்த தடை இல்லை.

மேலும் டெல்லி வழியாக மற்ற மாநிலத்திற்கு ட்ரக்குகள்  செல்வதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ட்ரக்குகள் நுழைவதற்கு பெரிய ட்ரக்குகளுக்கு 2600 ரூபாயும் சிறிய ட்ரக்குகளுக்கு 1400 ரூபாயும் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 10 ஆண்டுகளுக்குள்  பழமையான ட்ரக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள அணைத்து டாக்ஸி நிறுவனங்களும் டீசல் கார்களுக்கு பதிலாக CNG கார்களை பயன்படுத்த இருக்கிறது. டீலர்கள் தங்களிடம் உள்ள டீசல் கார்களை விற்கும் வரைக்கும் கால அவகாசம் வேண்டும் என கூறியுள்ளனர். இல்லை என்றால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவின் தலை நகரத்தில் இது போன்ற ஒரு தடை ஆட்டோமொபைல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.