டெல்லியில் டீசல் வாகனங்களை பதிவு செய்ய தடை

டெல்லியில் டீசல் வாகனங்களை ஜனவரி 6 ஆம் தேதி வரை பதிவு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் மாசுவை கட்டுப்படுத்த இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை ஜனவரி 6 ஆம் தேதி அன்று நீக்கப்படுமா இல்லை தொடருமா என்பது பற்றி தெரியவில்லை. இந்த தடைக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இது ஆட்டோ மொபைல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஏனெனில் இந்த தடை தொடருமானால் நிறைய நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதிக அளவு முதலீட்டை டீசல் என்ஜினில் செய்துள்ளது. மேலும் டீசல் என்ஜின்களின் கதி என்னவாகும்  என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிக அளவு மாசு காரணமாக சில நாடுகளில் டீசல் என்ஜினை விட பெட்ரோல் என்ஜினுக்கு அதிக முக்கியத்துவம் தருவது குறிப்பிடத்தக்கது.   

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.