இரட்டை வண்ணம் கொண்ட டொயோட்டா எட்டியோஸ் லிவா வெளியிடப்பட்டது

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் i10, மாருதி சுசூகி இக்னிஸ் என பெருகி வரும் போட்டியை சமாளிக்க டொயோட்டா நிறுவனம் இரட்டை வண்ணம் மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் கொண்ட எட்டியோஸ் லிவா மாடலை வெளியிட்டுள்ளது. இந்த இரட்டை வண்ண மாடல் V மற்றும் VX  வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.

இந்த மாடலில் முன்புற கிரில் முழுவதும் கருப்பு வண்ணமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய அலாய் வீல், எலெக்ட்ரிக்கல் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் தனியாக பிரிக்க கூடிய ஹெட் ரெஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ப்ளூ, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும். எஞ்சினை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 1.2 மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினிலேயே தான் கிடைக்கும்.

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 80 bhp (5600 rpm) திறனும் 104Nm (3100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 17.71 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 68 bhp (3800 rpm) திறனும் 170Nm (1800-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  23.59 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.