ரூ. 3.88 கோடி விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது பெர்ராரி 488 GTB

பெர்ராரி நிறுவனம் ரூ. 3.88 கோடி விலையில் இந்தியாவில் 488 GTB மாடலை வெளியிட்டுள்ளது. 458 இத்தாலியா மாடலில் சிறிய மாற்றங்களை செய்து 458 GTB மாடலை உருவாக்கியுள்ளது பெர்ராரி நிறுவனம்.

இந்த மாடலில் ட்வின் டர்போ சார்ஜ் 3.9 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 661 bhp  திறனும்760 Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்ட டியுயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் பெர்ராரி நிறுவனத்தின் டார்க் மேனேஜ்மென்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திலும் 200 கிலோமீட்டர் வேகத்தை 8.3 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.