ஃபெர்ராரி F12 tdf (Tour De France) மாடல் வெளிப்படுத்தப்பட்டது

ஃபெர்ராரி F 12 மாடலின் சிறப்பு பதிப்பான F 12 tdf (Tour De France) மாடலை வெளிப்படுத்தப்பட்டது. இந்த மாடல் வெறும் 799 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும். பாதிக்கு மேற்பட்ட மாடல்களின் முன்பதிவு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் என்ஜினில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 6.3 லிட்டர் V 12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 778 bhp திறனும் 705 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்து சாதாரண மாடலை விட 38 bhp திறனும் 11 Nm இழுவைதிறனும் அதிகம் கொண்டது. 

இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக 340 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.இந்த மாடல் வெறும் 799 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.