ரூ 4.2 கோடி ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஃபெர்ராரி GTC4லுஸ்ஸோ T

ஃபெர்ராரி நிறுவனம்  GTC4லுஸ்ஸோ T மாடலை ரூ 4.2 கோடி இந்திய ஷோரூம் விலையிலும் அதிக திறன் கொண்ட GTC4லுஸ்ஸோ மாடலை  ரூ 5.2 கோடி இந்திய ஷோரூம் விலையிலும் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது ஃபெர்ராரி FF  மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மேலும் இந்த மாடலில் 4 பேர் வரை அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் பின்புறம் முற்றிலுமாக மற்றும் சிறப்பாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும்  முன்புறத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. உட்புறத்தில் கூடுதலாக 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 

அதிக திறன் கொண்ட GTC4லுஸ்ஸோ மாடலில்  6.3 லிட்டர் V12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 689Bhp திறனையும் 697 Nm  இழுவைதிறனையும்  வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 335 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் டியூவல் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் மற்றொரு மாடலான GTC4லுஸ்ஸோ T மாடலில்  3.9 லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 610Bhp திறனையும் 760 Nm  இழுவைதிறனையும்  வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலிலும் 7 ஸ்பீட் டியூவல் கிளட்ச் தான் பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.