ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது ஃபெர்ராரி GTC4லுஸ்ஸோ

ஃபெர்ராரி நிறுவனம் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் GTC4லுஸ்ஸோ மாடலை காட்சிப்படுத்தியது. இது ஃபெர்ராரி FF  மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மேலும் இந்த மாடலில் 4 பேர் வரை அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்புறம் முற்றிலுமாக மற்றும் சிறப்பாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும்  முன்புறத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. உட்புறத்தில் கூடுதலாக 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலிலும் அதே 6.2 லிட்டர் V12 என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அனால் இது 680Bhp திறனையும் 697 Nm  இழுவைதிறனையும்  வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் டியூவல் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.