350 சிறப்பு பதிப்பு மாடல்களுடன் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் பெர்ராரி

பெர்ராரி நிறுவனம் தனது 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் 350 சிறப்பு பதிப்பு பெர்ராரி  மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது. இதற்காக வெனிஸ் நகரில் நடைபெற்ற பெர்ராரி  கேவலக்கேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 உரிமையாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளது. 

இந்த 350 சிறப்பு பதிப்பு மாடல்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. 70 வருட பெர்ராரி நிறுவன வரலாற்றை பறைசாற்றும் விதமாக பழைய பாரம்பரிய கார்கள் முதல் தற்போதைய கார்கள் வரை அனைத்தையும் காட்சிப்படுத்த உள்ளது. எந்தெந்த கார்கள் இந்த லிஸ்டில் இடம்பெறும் என்பதை விரைவில் பெர்ராரி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.