9.95 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது அபார்த் புண்டோ எவோ மற்றும் அவென்ச்சுரா

இந்தியாவின் மிக அதிக செயல்திறன் கொண்ட அபார்த் புண்டோ எவோ மற்றும் அவென்ச்சுரா மாடலை  ஃபியட் நிறுவனம் 9.95 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டது. அபார்த் புண்டோ அவென்ச்சுரா மாடல் தான் இந்தியாவின் முதல் அதிக செயல்திறன் கொண்ட கிராஸ் ஓவர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபியட் நிறுவனம் அபார்த் பிராண்டில்  595 காம்படிசன் மாடலை  விற்பனை செய்து வருவதும்  குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 1.4 லிட்டர் டி-ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 145 Bhp திறனையும் 210 Nm இழுவை திறனையும் வழங்கும். வெளிப்புறத்தில் சில ஸ்போர்டியான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 16 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அணைத்து வீலிலும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.  உட்புறத்திலும் ஸ்போர்டியாக தெரியுமாறு மாற்றப்பட்டுள்ளது.

அபார்த் புண்டோ எவோ மற்றும் அவென்ச்சுரா மாடல்கள் வோல்க்ஸ் வேகன் - போலோ TSI மாடலுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் சிறந்த செயல்திறன் கொண்ட ஹட்ச் பேக் மாடலாகவும் விலை குறைந்த மாடலாகவும் இருக்கும். மேலும் அபார்த் புண்டோ எவோ மாடல் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.