வெளிப்படுத்தப்பட்டது புதிய ஃபியட் க்ரோனோஸ் செடான்

ஃபியட் நிறுவனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய க்ரோனோஸ் செடான் மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் லீனியா மாடலுக்கு மாற்றாக பிரேசில் மார்க்கெட்டில் வெளியிடப்பட உள்ளது. 

இந்த மாடலில் ஃபியட் அர்கோ ஹேட்ச் மாடலின் வடிவமைப்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில்  ஃபியட் நிறுவனத்தின் புதிய தலைமுறை க்ரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு சில நாட்களில் பிரேசிலில் வெளியிடப்படும் ஆனால் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. எனினும் இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்கோ மாடல் போலவே இந்த மாடலிலும் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், தோல் இருக்கை கவர் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் பிரேசிலில் 1.0 லிட்டர், 1.3 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் டீசல் என்ஜின்களில் வெளியிடப்படும். இந்தியாவில் இந்த மாடல் வெளியிடப்பட்டால் அதே 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.