அதிக திறனுடன் வெளியிடப்பட்டது ஃபியட் லீனியா, புன்டோ எவோ மற்றும் அவென்ச்சுரா

ஃபியட் நிறுவனம் லீனியா, புன்டோ எவோ மற்றும் அவென்ச்சுரா கார்களை கூடுதல் திறனுடனும் மற்றும் புதிய 5 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டத்துடனும் வெளியிட்டுள்ளது. புதிய லீனியா 125S மாடலில் 125 Bhp  திறனை வழங்கும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதே போல் புதிய  புன்டோ எவோ பவர் டெக் மற்றும் அவென்ச்சுரா  பவர் டெக் மாடல்களில் 90 Bhp  திறனை வழங்கும் 1.3 லிட்டர் மல்டி ஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மாடல்களில் புதிய 5 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. புன்டோ எவோ மற்றும் அவென்ச்சுரா மாடல்களின் டாப் வேரியண்டில் மட்டும் இந்த 1.3 லிட்டர் மல்டி ஜெட் டீசல் என்ஜின் இதுவரை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது இதன் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். புன்டோ எவோ மற்றும் அவென்ச்சுரா மாடல்கள் இரண்டும் ஆக்டிவ், டைனமிக் மற்றும் எமோஷன் எனும் மூன்று வேரியண்டுகளில்  கிடைக்கும்.

புதிய லீனியா 125S மாடல் ரூ. 7.82 லட்சம் ஆரம்ப விலையிலும், புதிய  புன்டோ எவோ பவர் டெக் மாடல் ரூ. 6.81 லட்சம் ஆரம்ப விலையிலும் மற்றும்  அவென்ச்சுரா  பவர் டெக் மாடல் ரூ. 7.87 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.